தமிழ்நாடு

திமுக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் உதயநிதி செப்.20ல் மதுரை மேலூரில் கலைஞர் நூற்றாண்டு விழா |DMK pioneers

மதுரை மேலூரில் வரும் 20ம் தேதி நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கி கௌரவிக்க உள்ளார். மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பில் 20ம் தேதி காலை 10 மணிக்கு 
மேலூரில் உள்ள கலைஞர் திடலில் கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கி கௌரவிக்கிறார். அதனை தொடர்ந்து மாலை 4 மணிக்கு மஸ்தான்பட்டியில் கலைஞரின் முழு திருவுருவச் சிலையை திறந்து வைத்து, பின்னர் 100 அடி உயர கொடிக் கம்பத்தில் திமுக கொடியேற்றுகிறார். மேலும் திமுக இளைஞர் அணியினருக்கான செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்க உள்ளார்.
 

00 Comments

Leave a comment