திடீர் தீ விபத்து அபாயம் : உலக முழுவதும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட கார்களை திரும்பப் பெற போவதாக BMW நிறுவனம் அறிவித்துள்ளது. நீர் பம்ப் மின் இணைப்புகள் சரியாக இல்லை என்றும், கார்களில் தீ விபத்து ஏற்படும் ஆபத்து இருப்பதால் குறிப்பிட்ட சில வகைக் கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. BMW i5, i7, 5 சீரிஸ், 7 சீரிஸ் மற்றும் M5 போன்ற பிரீமியம் மாடல் கார்கள் இந்த அறிவிப்பில் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக 2022 முதல் 2025-ம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட கார்களில் இந்தப் பாதிப்பு இருக்கலாம் என தெரிவித்த நிறுவனம், பாதிக்கப்பட்ட கார்களின் உரிமையாளர்களுக்கு, எவ்விதக் கட்டணமும் இன்றி இந்த கோளாறுகளை இலவசமாக சரிசெய்து தரப்படும் எனவும் தெரிவித்துள்ளது. Related Link பேட்டரி குளறுபடியால் தீ பிடிக்கும் அபாயம் என எச்சரிக்கை