தமிழ்நாடு

விநாயகபுரம் கருப்பசாமி கோவில் படியளக்கும் பெருவிழா

விநாயகபுரம் கருப்பசாமி கோவில் படியளக்கும் பெருவிழா

கடலூர் சேத்தியாத்தோப்பு விநாயகபுரம் கருப்பசாமி ஆலயத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு படியளக்கும் பெருவிழா நடைபெற்றது. முன்னதாக மூலவர் கருப்பசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற கோவில் பூசாரி கத்தி மேல் நின்றபடி பக்தர்களுக்கு அருளாசிகளை வழங்கினார். இதனை தொடர்ந்து கிலோ கணக்கில் வைக்கப்பட்டிருந்த சில்லறை நாணயங்களை பூசாரி பக்தர்களுக்கு பிடிக்காசாக வழங்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கண் விழித்து அவற்றை பெற்றுச் சென்றனர். சித்ரா பௌர்ணமியன்று பிடிக்காசு வாங்கி சென்றால் வற்றாத செல்வமும் பெருகும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாக உள்ளது. 
 

00 Comments

Leave a comment