மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை காங்கிரஸ் ஆதரிப்பதாக தெரிவித்த அந்த கட்சியின் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்தி, ஆனால் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டால், அது பெண்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாக இருக்கும் எனவும் கூறினார். புதிய நாடாளுமன்ற நடவடிக்கைகளின் முதல் நாளான நேற்று, மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது. இரண்டாவது நாளான இன்று, அதன் மீது நடந்த விவாதத்தை, காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தி துவக்கி வைத்து பேசினார்.
மகளிருக்கான இட ஒதுக்கீட்டில், பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் இதர பின்தங்கிய வகுப்பினருக்கு உள் ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என சோனியா கேட்டுக் கொண்டார். மகளிர் இட ஒதுக்கீடு என்பது,தமது கணவரும் காலஞ்சென்ற முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் ஒரு கனவு எனவும் சோனியா கூறினார்.
தமிழ்நாடு
00 Comments
Leave a comment