தமிழ்நாடு

மூன்றாம் கட்டத்திலும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படலாம் ஆரணி அடுத்த சேவூரில் அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 65% மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டுள்ளன என்றும்
மேலும் மனுக்கள் மீதான மேல் முறையிடும் மகளிர் செய்வதால் மூன்றாம் முறையாக
தகுதியான மகளிர்களுக்கு உரிமை தொகை கிடைக்கும் என்று அமைச்சர் எ.வ.வேலு பேச்சு.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேவூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில்
நடைபெற்ற இரண்டாம் கட்டமாக மகளிர் உரிமை தொகை வழங்கும் விழாவானது மாவட்ட
ஆட்சியர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றன.

இந்த விழாவில் சிறப்பு அழைப்பளாராக சட்ட பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி
மற்றும் பொதுபணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்று தகுதி
வாழ்ந்த மகளிர்களுக்கென மாதம் மாதம் ஆயிரம் ரூபாய் அவரவர் வங்கி கணக்கில்
வரவு வைத்து முகாமானது தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அமைச்சர் மாவட்டத்தில் 65% சதவிதம் தகுதியுள்ள மகளிர்களுக்கு
உரிமை தொகை வழங்கியதாகவும்.

இரண்டாம் கட்டத்தில் மாவட்ட அளவில் தகுதிவாழ்ந்த 26295 மகளிர்களுக்கு
வழங்கப்பட்டன என்றும் மேலும் மேல் முறையிடு மனுக்கள் வந்துகொண்டோ இருப்பதால்
மூன்றாம் கட்டத்திலும் உரிமை தொகை வழங்கலாம் என்று பேசினார்.

மேலும் விழாவின் மண்டபத்தின் முன்பு ஏராளமான குளையுடன் உள்ள வாழை மரங்களை
கட்டியதை பார்த்த பெண்கள் ஆண்கள் என்று பலரும் வாழை தாரில் இருந்த வாழை
காய்களை எட்டி எட்டி பறித்தும் வாழை மரங்களை பாதியில் உடைத்தும் வாழைகாய்களை
பறித்து அள்ளியும் கயிற்றால் கட்டியும் எடுத்து சென்று உர்ச்சாகமடைந்தனர்.

மூன்றாம் கட்டத்திலும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படலாம்  ஆரணி அடுத்த சேவூரில் அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

00 Comments

Leave a comment