இந்தியா

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம்.. இஸ்ரோ இணை இயக்குநர் செந்தில்குமார் தகவல் | ISRO

இஸ்ரோ அடுத்தகட்டமாக விண்வெளிக்குமனிதர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த உள்ளதால் அதற்கான சோதனைகளை செய்து வருகிறது. மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவதால் அதற்கான பாதுகாப்பு குறித்து ஆய்வில் ஈடுபட்டுள்ளதாக இஸ்ரோ இணை இயக்குநர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.


சென்னை அடுத்த ராமாபுரத்தில் உள்ள எஸ் ஆர் எம் ஈஸ்வரி பொறியியல் கல்லூரியில் முதாலம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் துணை இயக்குனர் செந்தில் குமார் கலந்து கொண்டு மாணவர்களிடம் சிறப்புரையாற்றினர்.அப்போது பேசிய அவர்

அனைத்து ஊழியர்களும் சமம் என்ற தனித்துவமான அடிப்படையில் செயல்படுவதே இஸ்ரோவுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்க முக்கிய காரணம் இஸ்ரோவில் ஒரு திட்டத்தை செயல்படுத்தும் போது பொறியாளர் விஞ்ஞானி என அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்

ஒருவருடைய வேலையில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் தயங்காமல் மற்றவர் அதை கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளும் அளவுக்கு இஸ்ரோவில் வெளிப்படை தன்மை உள்ளது இதுபோன்று இணைந்து செயல்படுவது இஸ்ரோவுக்கு வெற்றி கிடைக்க முக்கிய காரணம் இணைந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்பது இஸ்ரோவின் தாரக மந்திரம் இதனை பின்பற்றினால் மற்றவர்களும் எளிதாக வெற்றி அடைய முடியும்


இஸ்ரோ அடுத்தகட்டமாக விண்வெளிக்குமனிதர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த அதற்கான சோதனைகளை செய்து வருகிறது. குறிப்பாக மனிதர்களை அனுப்புவதால் அதற்கான பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து வருகிறது மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் மிகவும் குறைந்த செலவில் விண்வெளிக்கு ராக்கெட் அனுப்புவதே இஸ்ரோவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி

இந்தியாவில் தொழில்நுட்பத் துறையில் வல்லுனர்களுக்கு மிகக் குறைந்த அளவிலேயே செலவு செய்யப்படுகிறது. நாசாவில் தொழில்நுட்ப வல்லுனர் ஒருவருக்கு ஆகும் செலவில் இந்தியாவில் நான்கு தொழில்நுட்ப வல்லுநர்களை பணிக்கு அமர்த்த முடியும் இதுவே குறைந்த செலவில் ராக்கெட் அனுப்புவதில் இஸ்ரோவுக்கு கிடைத்த வெற்றிகளில் முக்கியமானதாக கருதப்படுகிறது


மேலும் இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் இணைத் தலைவர் நிரஞ்சன் கல்லூரியின் இயக்குனர் மற்றும் துணை இயக்குனர்கள் முதலாம் ஆண்டு சேர்ந்த ஆயிரத்து நூறு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்
 

00 Comments

Leave a comment