தலைமைச்செயலகத்தில் தவெக அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம்
முதலமைச்சர் விஜய் தலைமையில் தவெக அரசின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. டாஸ்மாக் நிர்வாக சீர்திருத்தம், புதிய தொழில் முதலீடு குறித்து அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. வெற்றித் தமிழகம் என்ற பெயரில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 436 திட்டங்களைக் கொடுத்த முதலமைச்சர் விஜய், ஒவ்வொரு துறைக்கும் இலக்குகளை நிர்ணயித்து உள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்தார்.
முதல் அமைச்சரவைக் கூட்டம்
முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவையின் முதல் கூட்டம், தலைமைச் செயலகத்தில் ‘வெற்றித் தமிழகம்’ என்ற பெயரில், இன்று ஜூன் 5ஆம் தேதி நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் கூறியதாவது;
ஒவ்வொரு துறைக்கும் தொலைநோக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதனை அந்தந்த துறை அமைச்சர்கள், அதிகாரிகளோடு இணைந்து கலந்தாலோசித்து முடிவெடுப்பர். இதுதொடர்பாக, முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தினார்.
தொலை நோக்குத் திட்டங்கள்
இளைஞர் மேம்பாடு, முன்னேற்றம், மகளிர் மேம்பாடு, விவசாயிகள் மற்றும் மீனவர்கள் வளர்ச்சி, லஞ்சம் இல்லாத நல்லாட்சி, போதை இல்லாத தமிழகம் என அனைத்து துறைகளுக்கும் தொலைநோக்கு திட்டங்களை முதல்வர் விஜய் வகுத்து கொடுத்துள்ளார். தேர்தல் வாக்குறுதியில் தரப்பட்டதையும் சேர்த்து, தற்போது 436 திட்டங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.
சட்டப்பூர்வ நடவடிக்கை
குட்கா, போதைப் பொருள் விற்பனையை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தெரிவித்தார்.

