மஞ்சு விரட்டில் ஆரம்பித்த பகை
மஞ்சு விரட்டில் ஆரம்பித்த பகை

கரும்புக்காட்டில் ரவுடி கதையை முடித்த கும்பல், மஞ்சு விரட்டில் ஆரம்பித்த பகை

மஞ்சுவிரட்டில் ஏற்பட்ட மோதலை அடுத்து இரட்டைக் கொ*க்கு, பழி தீர்க்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Published on: 

சிவகங்கை அருகே பிரபல ரவுடி சுள்ளான் மதன் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொ* செய்யப்பட்ட நிலையில், ஓராண்டுக்கு முன்பு மஞ்சுவிரட்டில் ஏற்பட்ட மோதலை அடுத்து நடைபெற்ற இரட்டைக் கொ*க்கு, அதே போல் மஞ்சு விரட்டின் போதே பழி தீர்க்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிவகங்கைச் சீமை பதற...
நண்பர்கள் புடைசூழ பட்டாக்கத்தியை வைத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியவர் தான், சிவகங்கை சீமையே பதற, படுகொ* செய்யப்பட்டிருக்கும் பிரபல ரவுடி சுள்ளான் மதன்.

சிவகங்கை மாவட்டம் புதுப்பட்டியைச் சேர்ந்த சுள்ளான் மதன் மீது, பல்வேறு காவல் நிலையங்களில் கொ*, கொ* முயற்சி உட்பட 15க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இன்ஸ்டாகிராமில் ஆயுதங்களுடன் ரீல்ஸ் போடுவதிலும் பிரபலமான சுள்ளான் மதன், கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தான் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரீல்ஸ் பதிவிட்டதற்காக கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். 6 நாள் சிறைவாசத்துக்கு பிறகு 7ஆம் தேதி தான் ஜாமீனில் வெளியே வந்தார்.

மஞ்சுவிரட்டு போட்டியில்...
இந்நிலையில், ஒக்கூர் அருகே மேலமங்கலத்தில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை பார்க்கச் சென்ற சுள்ளான் மதனை, பயங்கர ஆயுதங்களுடன் சுற்றிவளைத்த கும்பல் ஓட ஓட விரட்டிச் சென்று கரும்பு தோட்டத்தில் வைத்து சரமாரியாக வெட்டிக் கொ* செய்து விட்டு தப்பிச் சென்றனர்.

கடந்த 2024ஆம் ஆண்டு கொல்லங்குடியில் நடைபெற்ற இரட்டைக் கொ*க்கு பழி தீர்க்கும் விதமாகவே இந்த சம்பவம் அரங்கேறியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

வாக்குவாதம், தகராறு, சம்பவம்
கடந்த 2024ஆம் ஆண்டு பனங்குடியில் நடந்த மஞ்சுவிரட்டில் பங்கேற்ற சுள்ளான் மதன், அரண்மனை சிறுவயலைச் சேர்ந்த ராஜேஷின் காளையை விதிகளை மீறி அடக்கியதாக வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. ராஜேஷ் தரப்புக்கு ஆதரவாக பேசிய மதுரை மாவட்டம் காரடிப்பட்டியைச் சேர்ந்த இரட்டை சகோதரர்களான ஜெயசூர்யா, சுபாஷ் ஆகியோர், ஒரு வாரம் கழித்து கொல்லங்குடி ஆலடி கண்மாய் பகுதியில் வெட்டிக் கொ* செய்யப்பட்டனர். இவ்வழக்கில் சுள்ளான் மதன் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதற்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்த சுள்ளான் மதனை, எதிர்தரப்பு தொடர்ந்து நோட்டமிட்டு வந்ததாகவும், தகுந்த நேரத்துக்காக காத்திருந்தவர்கள் மேலமங்கலம் மஞ்சுவிரட்டை பார்க்க வந்த சுள்ளான் மதனை பக்காவாக பிளான் போட்டு பழிதீர்த்ததாகவும் கூறப்படுகிறது.

மூவர் கைது
ரவுடி சுள்ளான் மதன் கொ* வழக்கு தொடர்பாக 6 தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், கொ* நடந்த 12 மணிநேரத்தில் 19 வயதான இளைஞர் பாலமுருகன், பிரதீப், பாபு ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.

மேலும், தலைமறைவான சிலரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்நிலையில், சுள்ளான் மதன் கொ*க்கு பழி தீர்ப்போம், தலை உருளும் என அவரது ஆதரவு ரவுடிகள் இன்ஸ்டாவில் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளனர். இப்பதிவை பார்த்த இணையவாசிகள் காவல்துறையினரை tag செய்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

newstamil.tv