தமிழ்நாடு

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் ஹாக்கி அணி கேப்டன்கள் சந்திப்பு 6 அணிகளின் கேப்டன்களும் பாரம்பரிய உடையணிந்து போஸ் | Udhayanithi Stalin

சென்னை எழும்பூரில் நடந்து வரும் ஆசிய ஹாக்கி போட்டியில் பங்கேற்றுள்ள அணிகளின் கேப்டன்கள், தமிழர்களின் பாரம்பரிய உடையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் இந்திய ஹாக்கி விளையாட்டு சங்கம் சார்பில், ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் கோப்பை போட்டிகள் சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பங்கேற்கும் 6 அணிகளின் கேப்டன்களுடன், தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் கலந்துரையாடி,குழு புகைப்படம் எடுத்து கொண்டார். அதில் அமைச்சர் உதயநிதி உட்பட அனைவரும் பாரம்பரிய உடையணிந்து இருந்தனர்.

 

தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் ஆசிய ஹாக்கி போட்டியில் பங்கேற்றுள்ள அணிகளின் கேப்டன்கள் தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் கோப்பை போட்டி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் இந்திய ஹாக்கி விளையாட்டு சங்கம் சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கில் கடந்த 3 ஆம் தேதி தொடங்கி வரும் 12 ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான், சீனா, கொரியா ஆகிய 6 நாடுகளின் அணிகள் மோதி வருகின்றனர்.

இந்நிலையில் மேயர் ராதா கிருஷ்ணன் மைதானத்தில், 6 அணிகளின் கேப்டன்களுடன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடி, கேப்டன்களுடன் குழு புகைப்படம் எடுத்து கொண்டார்.

அப்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர், ஹாக்கி அணியின் கேப்டன்கள், ஹாக்கி விளையாட்டுச் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து கலந்து கொண்டனர்.

இதில் இளைஞர் நலமுடன் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, இந்தியா ஹாக்கி விளையாட்டு சங்க தலைவர் டயாப் இக்ரம், பொருளாளர் சேகர் மனோகரன், செயலாளர் பொலோனாத் சிங் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

00 Comments

Leave a comment