தமிழ்நாடு

தாத்தாவிற்கு ஒரு பேரனாக நான் செய்யும் கடமை - Minister udhayanidhi stalin chennai

கலைஞர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வது தாத்தாவிற்கு ஒரு பேரனாக தாம் செய்யும் கடமை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உணர்ச்சிமிக்க கூறினார். சென்னை ராயபுரத்தில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பள்ளி மைதானத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கட்சி மூத்த நிர்வாகிகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், அண்ணா கட்சி தொடங்கிய இந்த பகுதியில் கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுவதாகவும், அதில் பங்கேற்றதில் தாம் பெருமையடைவதாகவும் கூறினார்.

00 Comments

Leave a comment