உலகம்

டேவிஸ் கோப்பை டென்னிசில் இருந்து போபண்ணா பிரியாவிடை.. டேவிஸ் கோப்பை போட்டிகளில் 25 முறை வெற்றி பெற்ற போபண்ணா

டேவிஸ் கோப்பை டென்னிஸ் World Group 2 ல் பெற்ற வெற்றியை தொடர்ந்து இந்திய வீர ர் ரோஹன் போபண்ணா தனது டேவிஸ் கோப்பை டென்னிஸ் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். நேற்று லக்னோவில் நடந்த இரட்டையர் பிரிவு போட்டியில், மொரோக்கோவின் எலியட்-லாரூசி ஜோடியை, இந்தியாவின் ரோஹன் போபண்ணா -யூகி ஜோடி மூன்றுக்கு ஒன்று என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. வெற்றிக்குப் பின்னர் தாம் டேவிஸ் கோப்பை போட்டிகளில் இருந்து பிரியாவிடை பெறுவதாக போபண்ணா தெரிவித்தார். டேவிஸ் கோப்பை போட்டிகளில் ஐம்பதாவது முறையாக களமிறங்கிய போபண்ணா, அவற்றில் 25 முறை வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

00 Comments

Leave a comment