news-tamil-logo

3/15/2026, 11:41:47 AM

news-tamil-logo
more
Home districtnews தனியார் இரும்பு உருக்கு ஆலையில் வெடித்த மர்ம பொருள்
tv

Also Watch

tv

Read this

தனியார் இரும்பு உருக்கு ஆலையில் வெடித்த மர்ம பொருள்

கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர்

Posted on: Feb 15, 2026 09:33 AM

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVL

வெடித்த மர்ம பொருள் :

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில்பேட்டையை ஒட்டி அமைந்துள்ள கங்கன் தொட்டி கிராமத்தில் கனிஷ்க் ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ் எனப்படும் தனியார் இரும்பு உருக்கு ஆலை உள்ளது.

இரும்பு கம்பிகள் மற்றும் இரும்பு சேனல்கள் தயாரிக்கும் இந்த தொழிற்சாலைக்கு தேவையான பழைய இரும்பு பொருட்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொழிற்சாலைக்கு கொண்டு வரப்படுகிறது.

இவ்வாறு மொத்தமாக கொண்டு வரப்படும் இரும்பு பொருட்கள் உற்பத்தியின் போது அடிக்கடி வெடித்து சிதறுவதாகவும் இதனால் அவ்வப்போது அதிக சத்தம் வருவதாகவும் கூறப்படுகிறது. அதேசமயம் நேற்று இரவு திடீரென வெடித்து சிதறிய மர்ம பொருளால் சுமார் பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் விரிசல் அடைந்து சேதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தொழிற்சாலை நுழைவாயிலில் பந்தல் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர் தகவல் அறிந்து வந்த சிப்காட் காவல் நிலை போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

Related Link
புனித அந்தோணியார் ஆலய திருவிழா  ஜல்லிக்கட்டு

புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஜல்லிக்கட்டு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு

0
2 mins agoshare
Election datebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved