

இடைத்தேர்தலுக்காக காத்திருக்குற திருச்சி கிழக்கு, விராலிமலை, கரூர், அம்பாசமுத்திரம், பெருந்துறை தொகுதிகள்ல நலத் திட்டங்கள்ங்கற பேர்ல ஆளும்கட்சி தேர்தல் வேலையப் பார்க்கத் துவங்கிடுச்சு. அந்த வகையில பெருந்துறையில ஊழியர்கள் கூட்டம் போட்டிருந்த அமைச்சர் செங்கோட்டையன், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியிலயும் கட்சிக் கூட்டங்களை நடத்தத் துவங்கியிருக்காரு.
விராலிமலையில முன்னாள் அமைச்சர் விஜய்பாஸ்கர் தான் வேட்பாளர்ங்கறதையும் செங்கோட்டையன் கட்சிக் கூட்டத்துல அறிவிச்சிருக்காரு. இந்த நிலையில, புதுக்கோட்டை மாவட்டத்தோட முக்கிய பிரமுகரா பார்க்கப்படுற புதுக்கோட்டை மன்னர் பரம்பரையச் சேர்ந்த கார்த்திக் தொண்டைமான், ஜெயலலிதா காலத்துல அதிமுகவுல இணைஞ்சாரு, எம்.எல்.ஏ.வாவும் அவரை ஜெயலலிதா ஆக்குனாங்க.
கிட்டத்தட்ட இருபது வருஷம் அதிமுகவுல இருந்த கார்த்திக் தொண்டைமான், அங்க இருந்து விலகி போன வருஷம் திமுகவுல இணைஞ்சுட்டாரு. ஆனா, திமுகவுல அவருக்கான மரியாதை இல்லைங்கற மனப்புழுக்கத்துல இருக்குறாராம்.
அவரை தவெகவுக்கு அழைச்சுட்டு வர விஜயபாஸ்கர் மூலமா செங்கோட்டையன் முயற்சி செய்யுறாராம்.
இடைத்தேர்தல் அறிவிப்புக்கு முன்னால கார்த்திக் தொண்டைமான் அநேகமா முதல்வர் முன்னிலையிலேயே தவெகவுல இணைஞ்சிடுவாருன்னு செங்கோட்டையன் வட்டாரம் சொல்லுது.