

மின் கொள்முதல், கேரளாவில் சர்ச்சை
இதுதொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி இருப்பதாவது;
த.வெ.க. ஆட்சியில் ஒரு யூனிட் மின்சாரத்தை 35 ரூபாய், 37 ரூபாய், 41.50 ரூபாய் கொடுத்து வாங்குவது பற்றி மின்துறை அமைச்சர் பேசிக் கொண்டிருக்கும் இதே காலத்தில், கேரள அரசு ஒரு யூனிட்டை 14.50, 12.50 ரூபாய்க்கு வாங்கியிருப்பதே அதிக விலை என சர்ச்சையாகி உள்ளது.
இதைவிடவும் முக்கியமானது, ஒரு தனியார் நிறுவனம் தினமும் 500 மெகாவாட் மின்சாரத்தை ஒரு யூனிட் 8.645 ரூபாய்க்கு வழங்குவதற்கு கேரள அரசை அணுகியும், அதைப் புறக்கணித்த சர்ச்சையில் கேரள மின்வாரியத் தலைவர் அந்த பொறுப்பிலிருந்தே நீக்கப்பட்டுள்ளார்.
தவெக அரசுக்கு...
நமக்கென்ன கேள்வியென்றால், 8.645 / 12.50/ 14.50 ரூபாய்களில் கேரளாவுக்கு மின்சாரம் கிடைக்குமென்றால் த.வெ.க. அரசுக்கு ஏன் அது சாத்தியமில்லாமல் போனது?
இதில் எவ்வளவு பெரிய ஊழல் நடந்துள்ளது, யார் யார் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என விசாரிக்க வேண்டும்.
மின்துறை அமைச்சரின் கட்டுப்பாட்டில்தான் DVAC அமைப்பும் இருப்பதால் அவர்கள் இதை விசாரித்தால் உண்மை வெளிவராது. சுதந்திரமான, வெளிப்படைத்தன்மை கொண்ட ஆணையம் விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.