ஐபிஎல் தொடரில் RCB, SRH அணிகளுக்கு பெரும் பின்னடைவு

நட்சத்திர பந்து வீச்சாளர்கள் காயம் காரணமாக பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த இரு அணிகளுக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
IPL News
IPL News
Published on: 

RCB, SRH அணிகளுக்கு பெரும் பின்னடைவு :

ஐபிஎல் தொடரில் ஆர்சிபி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளின் நட்சத்திர பந்து வீச்சாளர்கள் காயம் காரணமாக பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த இரு அணிகளுக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

கடந்த சீசனில் ஆர்சிபி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்த ஜோஷ் ஹேசில்வுட்டுக்கு தொடை மற்றும் கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளதால், முதல் 2 போட்டிகளிலும் அவர் பங்கேற்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. அதேபோல, சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன், வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸுக்கு முதுகில் ஏற்பட்டுள்ள காயத்தால் 3 முதல் 5 போட்டிகளை தவறவிடக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.

newstamil.tv