

சென்னை ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியா அபாரம் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய வைஷ்ணவி, ருதுஜா ஜோடி.இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் ஜோடி என பெருமை
சென்னை ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு இந்தியாவின் வைஷ்ணவி, ருதுஜா ஜோடி முன்னேறியது.
பெண்களுக்கான இரட்டையர் பிரிவு அரையிறுதியில், இந்தியாவின் வைஷ்ணவி, ருதுஜா ஜோடி, போலந்தின் வெரோனிகா பால்கோவ்ஸ்கா, அமெரிக்காவின் அலானா ஸ்மித் ஜோடியை எதிர்கொண்டது.
இதில், 6–க்கு 2, 2–க்கு 6, 10–க்கு 8 என்ற செட் கணக்கில் இந்திய ஜோடி வென்றது.
இதன் மூலம், சென்னை ஓபன் டென்னிஸ் போட்டில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய ஜோடி என்ற பெருமை பெற்றது.