KL Rahul
KL Rahul

டெல்லி கேப்பிடல்ஸ் அணி தொடக்க வீரராக கே.எல். ராகுல்

ராகுலுடன் பென் டக்கெட் அல்லது பதும் நிசாங்கா தொடக்க வரிசையில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Published on: 

தொடக்க வீரராக கே.எல். ராகுல் :

டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரராக கே.எல். ராகுல் களமிறங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர், பேட்டிங்குடன் சேர்த்து விக்கெட் கீப்பர் பணியையும் கவனிப்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. 2025 ஐபிஎல் சீசனில் ராகுல் பெரும்பாலும் 4-வது வரிசையில் விளையாடிய நிலையில், தொடக்க வீரர்கள் யாரும் சரியாக விளையாடவில்லை.

ஆகவே, இந்த முறை ராகுலையே மீண்டும் தொடக்க வீரராக களமிறக்க டெல்லி அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ராகுலுடன் பென் டக்கெட் அல்லது பதும் நிசாங்கா தொடக்க வரிசையில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

newstamil.tv