

மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். கோலாலம்பூரில் நடைபெற்ற போட்டியில், சிங்கப்பூரின் ஜேசன் டேவை எதிர் கொண்ட லக்சயாசென் முதல் செட்டை 21க்கு 16 என கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக 2வது செட்டை ஜேசன் டே 21க்கு 15 என வென்றார். இதனையடுத்து 3வது செட்டை 21க்கு 14 என்ற புள்ளிக்கணக்கில் வென்ற லக்ஷயா சென் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மேலும் படியுங்கள் : விஜய் ஹசாரே கோப்பை தொடர்