விஜய் ஹசாரே கோப்பை தொடரில் திரிபுரா அணிக்கு எதிரான போட்டியில் தமிழ்நாடு அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பையில் நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு - திரிபுரா அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் குவித்தது. தொடர்ந்து 260 ரன்கள் இலக்குடன் விளையாடிய திரிபுரா அணி 42புள்ளி 4 ஓவர்களில் 205 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது.மேலும் படியுங்கள் :மகளிர் கிரிக்கெட் சிறந்த வீராங்களுக்கான தரவரிசை பட்டியல்