

பாகிஸ்தான் அணியில் இருந்து சைம் அயூப் அதிரடி நீக்கம் 3 போட்டிகளிலும் சேர்த்து வெறும் 21 ரன்கள் மட்டுமே எடுத்தார்
முத்தரப்பு ஒருநாள் தொடரில் மோசமான ஆட்டம் எதிரொலியாக பாகிஸ்தான் அணியிலிருந்து சைம் அயூப் நீக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில், இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
எனினும், தொடக்க வீரர் சைம் அயூப் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 3 போட்டிகளிலும் சேர்த்து வெறும் 21 ரன்கள் மட்டுமே எடுத்ததால், அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.