

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஜிம்பாப்வே அணி புதிய சாதனை 2 இன்னிங்ஸிலும் 500 ரன்களை கடந்த முதல் அணி என சாதனை ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக புதிய வரலாற்று சாதனை
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இரு இன்னிங்ஸ்களிலும் 500 ரன்களை கடந்து ஜிம்பாப்வே அணி புதிய சாதனை படைத்துள்ளது.
ஷார்ஜாவில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 504 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் அணி 514 ரன்கள் குவித்தது.
10 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஜிம்பாப்வே அணி, கடைசி நாள் ஆட்டத்தில் 5 விக்கெட் இழப்புக்கு 523 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டம் டிராவில் முடிந்தது.