மனிஷா ராமதாஸ்
CM Vijay

தமிழக வீராங்கனை மனிஷாவுக்கு ரூ.30 லட்சம் பரிசு

வீராங்கனை மனிஷா ராமதாஸுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து
Published on: 
Summary

தமிழக வீராங்கனை மனிஷாவுக்கு ரூ.30 லட்சம் பரிசு வீராங்கனை மனிஷா ராமதாஸுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து

ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பேட்மிண்டன் விளையாட்டில், பெண்கள் ஒற்றையர் SU5 பிரிவில், வெண்கலப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள வீராங்கனை மனிஷா ராமதாஸ் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வீராங்கனை மனிஷா ராமதாஸ் அவர்களின் சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ. 30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும்.

இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அவர் பெறும் இரண்டாவது பதக்கம் இதுவாகும்.

அவர் எதிர்காலத்தில் மேலும் பல வெற்றிகளைப் பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க எனது நல்வாழ்த்துகள்!

மனிஷா ராமதாஸ்
தமிழக வீரர் சோலைராஜ் தர்மராஜ் தங்கப்பதக்கம் வென்றார்
newstamil.tv