

Chef தாமுவின் மறைவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்
தாமுவின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆறுதல்
பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு என்று அழைக்கப்படும் திரு.கே.தாமோதரன் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.
தனது சமையல் திறமையாலும், தனித்துவமான அணுகுமுறையாலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வாயிலாகச் சமையல் கலையை மக்களிடம் கொண்டு சேர்த்தவர்.
2010 ஆம் ஆண்டில் தனிநபரின் மிக நீண்ட சமையல் மாரத்தான் என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்ததோடு, பத்மஸ்ரீ விருதும் பெற்ற பெருமைக்குரியவர்.அவரது மறைவு சமையல் கலைத் துறைக்குப் பேரிழப்பாகும்.
அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், சமையல் கலையை நேசிக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.