

பஞ்ச் என்ற குட்டிக் குரங்கு தற்போது மற்ற குரங்குகளுடன் சகஜமாகப் பழகும் வீடியோ
ஜப்பானில் இணையத்தில் பிரபலமான பஞ்ச் என்ற குட்டிக் குரங்கு, தற்போது மற்ற குரங்குகளுடன் சகஜமாகப் பழகும் வீடியோ வெளியாகி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாய் குரங்கால் பிறந்த சில நாட்களிலேயே கைவிடப்பட்ட பஞ்ச், தனிமையைப் போக்க பொம்மை ஒராங்குட்டானைத் துணையாகக் கொண்டு வளர்ந்தது.
இதனால் உலகம் முழுவதும் பிரபலமான பஞ்ச், தற்போது மற்ற இரண்டு குரங்குகளுடன் விளையாடிப் பழகும் காட்சிகளை இச்சிகாவா உயிரியல் பூங்கா வெளியிட்டுள்ளது.