Russia ukrine
உலகம்
ரஷ்யா - உக்ரைன் போரை உடனடியாக நிறுத்த அழைப்பு
இந்தியா, அமெரிக்கா, பக்ரைன், வங்காளதேசம், பிரேசில், சீனா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்பட 51 நாடுகள் புறக்கணித்து நடுநிலை வகித்தன.
போரை உடனடியாக நிறுத்த அழைப்பு :
ரஷ்யா - உக்ரைன் போரை உடனடியாக நிறுத்த அழைப்பு விடுத்து ஐ.நா. சபையில் வரைவு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. "உக்ரைனில் நீடித்த அமைதிக்கான ஆதரவு" என்ற தலைப்பில் உக்ரைன் அறிமுகப்படுத்திய இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, பிலிப்பைன்ஸ், போலந்து உள்பட 107 நாடுகள் வாக்களித்தன.
ரஷ்யா, ஈரான், கியூபா உள்பட12 நாடுகள் எதிராக வாக்களித்தன. இந்தியா, அமெரிக்கா, பக்ரைன், வங்காளதேசம், பிரேசில், சீனா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்பட 51 நாடுகள் புறக்கணித்து நடுநிலை வகித்தன.

