மூன்றாம் உலகப் போரை தொடங்கி விட்டார் : உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பின் மூலம் ரஷ்ய அதிபர் புடின் ஏற்கனவே மூன்றாம் உலகப் போரைத் தொடங்கிவிட்டாரென, தான் நம்புவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பிபிசி-க்கு அளித்த நேர்காணலில் குற்றஞ்சாட்டியுள்ளார். "மூன்றாம் உலகப் போரை பற்றி வெவ்வேறு கருத்துகள் உள்ளது, ஆனால் புடின் அதை ஏற்கனவே தொடங்கிவிட்டார்" என தெரிவித்துள்ள ஜெலன்ஸ்கி, இந்த மோதல் உலகளாவிய போராக மாறுவதை தவிர்க்க கடுமையான அழுத்தம் தேவையென்று வலியுறுத்தியுள்ளார். ரஷ்யா - உக்ரைன் மோதல் தொடங்கி 4 ஆண்டுகளை எட்டியுள்ள நிலையில் ஜெலன்ஸ்கி இவ்வாறு தெரிவித்துள்ளார். Related Link மத்திய கிழக்கில் போர் விமானங்களை குவிக்கும் அமெரிக்கா