US Cyclone
உலகம்
அமெரிக்காவை புரட்டிப்போட்ட பாம் சைக்ளோன் பனிப்புயல்
பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பாம் சைக்ளோன் பனிப்புயல் :
அமெரிக்காவில் வீசிய பாம் சைக்ளோன் சூறாவளியால் சுமார் 4 கோடி பேரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வரலாறு காணாத வகையில் வீசிய ஹெர்னான்டோ என்ற பனிப்புயல், நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி நகரங்களை புரட்டிப்போட்டுள்ளது.
இந்த பனிப்புயலால் சாலைகள், விமான நிலையங்கள் என எங்கு பார்த்தாலும் பனிக்கட்டிகளாக கிடக்கின்றன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

