USA Officer
உலகம்
அக்டோபர் 20-ல் ஜெய்சங்கர்- மார்கோ ரூபியோ சந்திப்பு
இந்தியா - அமெரிக்கா இடையிலான விரிவான உலகளாவிய வர்த்தகம் மற்றும் அரசியல் உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
இந்தியா- அமெரிக்கா உறவினை வலுப்படுத்துவது பற்றி ஆலோசனை
இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவுடன், வரும் 20-ஆம் தேதி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மும்பையில் நடைபெறும் இந்தச் சந்திப்பில், இந்தியா - அமெரிக்கா இடையிலான விரிவான உலகளாவிய வர்த்தகம் மற்றும் அரசியல் உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
ராஸ் அல் கைமா ஆட்சியாளருடன் ஜெய்சங்கர் சந்திப்பு
ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமா ஆட்சியாளர் ஷேக் சவுத் பின் சக்ர் அல் காசிமியை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.
இந்தச் சந்திப்பின்போது, இந்தியா- ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

