

மாலத்தீவு எதிர்க்கட்சித் தலைவர் கைது சிறுமி மீதான பாலியல் புகாரின் அடிப்படையில் கைது
மாலத்தீவு முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் அப்துல்லா ஷாஹித் கைது செய்யப்பட்டுள்ளார்.
18 வயதுக்குட்பட்ட சிறுமி மீதான பாலியல் புகாரின் அடிப்படையில், நீதிமன்ற உத்தரவின்பேரில் காவல்துறையினர் அவரைக் கைது செய்துள்ளனர்.இந்தப் புகார் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.