ஈரான் குடியேறிகளின் விமானத்தை திருப்பி அனுப்பிய பாகிஸ்தான்

பாகிஸ்தான் வழியாக ஈரானிய, ஆப்கானிய குடியேறிகளை நாடு கடத்த அமெரிக்கா திட்டமிட்ட நிலையில், ஈரான் குடியேற்றிகளை ஏற்றிச் சென்ற விமானத்தை பாகிஸ்தான் திருப்பி அனுப்பியது.
அமெரிக்கா திட்டம்
பாகிஸ்தான் அதிரடி நியூஸ்தமிழ்24x7
Published on: 

தலிபான்கள் ஆளும் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளுடனும் அமெரிக்காவிற்கு நேரடி விமானத் தொடர்புகள் இல்லாத நிலையில், அந்நாட்டு சட்டவிரோத குடியேறிகளை பாகிஸ்தானின் வழியாக நாடு கடத்தி அங்கிருந்து அவர்களின் சொந்த நாடுகளுக்கு அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டது.

இதனை வன்மையாக கண்டித்த மனித உரிமை அமைப்புகள், பாகிஸ்தான் வழியாக அவர்கள் நாடு கடத்தப்பட்டால் அங்குள்ள ஆட்சியாளார்கள் கடுமையாக துன்புறுத்தப்படுவார்கள் என குற்றம் சாட்டியுள்ளது.

டிரம்பின் புதிய திட்டத்திற்கு சொந்த கட்சியினரே எதிர்ப்பு

ஜனநாயக கட்சி
முடிவுக்கு எதிர்ப்பு நியூஸ்தமிழ்24x7

அமெரிக்க பொது நிலங்களை மாகாணங்கள், பழங்குடியினர் மற்றும் உள்ளூர் அரசாங்கங்களுக்கு விற்பனை செய்யும் புதிய திட்டத்தை அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.

இதற்கு, ஜனநாயகக் கட்சியினர் மட்டுமின்றி, சொந்தக் கட்சியான குடியரசுக் கட்சியினரிடமிருந்தே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பொது நிலங்கள் அமெரிக்க மக்களுக்கே சொந்தமானவை என்றும், தனியார் நலன்களுக்காக அவற்றை விற்க அனுமதிக்க முடியாது என்றும் ஜனநாயகக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவுக்கு எதிரான வெறுப்புணர்வை ஒழிப்பதற்கு முன்னுரிமை

இந்திய வம்சாவளி
முன்னுரிமை நியூஸ்தமிழ்24x7

இந்தியாவுக்கு எதிரான வெறுப்புணர்வை தடுப்பதும், வெள்ளை மாளிகையின் வரி விதிப்பு அதிகாரங்களை நாடாளுமன்றத்திடம் கொண்டு வருவதும் தனது முதன்மையான இலக்குகள் என அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய-அமெரிக்கரான டாக்டர் அமிஷ்ஷா தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் புலம் பெயர்ந்தோருக்கு எதிரான வெறுப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கவலை தெரிவித்துள்ள அவர், அவற்றை தடுத்து நிறுத்தத் தனது பதவியை பயன்படுத்துவதாக உறுதியளித்துள்ளார்.

அமெரிக்கா திட்டம்
ஜம்மு-காஷ்மீரில் காணாமல் போன காவல் அதிகாரிகள் பலி