போப் லியோ
போப் லியோ

முதல் பொது நிகழ்வில் பங்கேற்ற போப் லியோ

வத்திக்கானில் உள்ள அப்போஸ்தலிக் அரண்மனையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை சிறப்புத் திருப்பலியை நிறைவேற்றினார்.
Published on: 

நுரையீரல் புற்றுநோய் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு முதல் நிகழ்வு

  • போப் லியோ, நுரையீரல் புற்றுநோய் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு தனது முதல் பொது நிகழ்வில் பங்கேற்றுள்ளார். வத்திக்கானில் உள்ள அப்போஸ்தலிக் அரண்மனையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை சிறப்புத் திருப்பலியை நிறைவேற்றினார்.

2035-ஆம் ஆண்டுக்குள் நிலவுக்குச் செல்ல பாக் இலக்கு

  • 2035-ஆம் ஆண்டுக்குள் நிலவுக்குச் செல்லும் இலக்கை பாகிஸ்தான் நிர்ணயித்துள்ளது. அந்நாட்டின் விண்வெளித் திட்டத்தை விரிவுபடுத்தும் முயற்சியில், முதல் பாகிஸ்தான் விண்வெளி வீரர் நவம்பர் 25-ஆம் தேதி சீனாவிலிருந்து விண்வெளிப் பயணத்தைத் தொடங்க உள்ளதாகத் அந்நாட்டு அமைச்சர் அஹ்சன் இக்பால் தெரிவித்துள்ளார்.

71 வயது மீனவரை கடித்துக்கொன்ற முதலை

  • அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில், 71 வயது மீனவர் ஸ்டீவன் ஹாமில்டன் என்பவரை சுமார் 12 அடி நீளமுள்ள முதலை தாக்கியதில் உயிரிழந்துள்ளார். வின்டர் கார்டன் பகுதியில் உள்ள குளத்தில் அவர் வழக்கமாக மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
  • இதையடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தாக்குதலில் ஈடுபட்ட முதலையை அதிகாரிகள் பிடித்துச்சென்றனர்.
newstamil.tv