இளவரசர் ஹாரி
இளவரசர் ஹாரி

குடும்ப பிரச்னையை சரி செய்ய களமிறங்கும் இளவரசர் ஹாரி

தனது சகோதரர் மற்றும் பெற்றோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு தங்களது குடும்பத்திலும் பிரதிபலித்ததாக தெரிவித்துள்ளார்.
Published on: 

சகோதரர், பெற்றோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு

  • அரச குடும்பத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனையை சரி செய்ய விரும்புவதாக பிரிட்டன் இளவரசர் ஹாரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தனது சகோதரர் மற்றும் பெற்றோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு தங்களது குடும்பத்திலும் பிரதிபலித்ததாக தெரிவித்துள்ளார்.

காசாவில் ஆயுதக்குழுக்களுக்கு இஸ்ரேல் நிதி, ஆயுத உதவி

  • காசாவில் உள்ள சில ஆயுதக்குழுக்களுக்கு இஸ்ரேல் நிதி மற்றும் ஆயுத உதவி வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஹமாஸ் அமைப்பிற்கு மாற்றாகவும், எதிராகவும் செயல்பட சில உள்ளூர் குழுக்களையும், ஆயுதமேந்திய மக்களையும் பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

கனரக சரக்கு லாரியின் பின்புறம் சுற்றுலா பேருந்து மோதி விபத்து

  • எகிப்தில் கனரக சரக்கு லாரியின் பின்புறம் சுற்றுலா பேருந்து பயங்கரமாக மோதியதில் 13 பேர் உயிரிழந்த நிலையில், 34 பேர் படுகாயமடைந்தனர். தலைநகர் கெய்ரோ - அஸ்யுத் நகரங்களை இணைக்கும் மேற்கு பாலைவன சாலையில் இந்த கொடூர விபத்து நிகழ்ந்துள்ளது.
newstamil.tv