US Missle
உலகம்
ஈரானின் கூற்றை திட்டவட்டமாக மறுத்துள்ள அமெரிக்கா
தங்கள் போர் விமானம் எதுவும் சேதமடையவில்லை என அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
தங்கள் போர் விமானம் எதுவும் சேதமடையவில்லை :
F-18 நவீன ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதை வீடியோ ஆதாரத்துடன் ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை தெரிவித்த நிலையில் அமெரிக்கா அதை மறுத்துள்ளது. அந்த விமானம் நடுவானில் தாக்கப்பட்டதாகவும், விமானி வெளியேறியதாகவும் காட்டும் காணொளிக் காட்சிகளை ஈரானிய அரசு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
இருப்பினும் விமானம் தாக்கப்பட்ட இடம், சேதத்தின் அளவு, விமானியின் நிலை குறித்த விவரங்களை உடனடியாக ஈரான் வழங்காத நிலையில், தங்கள் போர் விமானம் எதுவும் சேதமடையவில்லை என அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

