

எங்களை எதிர்த்தால் இதுதான் கதி: டிரம்புக்கு ஈரான் எச்சரிக்கை "ஹோர்முஸில் உத்திசார் தோல்வி: அமெரிக்காவில் அரசியல் தோல்வி" ஈரான் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் எக்ஸ் பதிவு
ஈரானை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அதற்கான விலையைத் தங்களின் வீட்டு வாசலிலேயே அனுபவிப்பார்கள் என அந்நாட்டின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் மொஹ்சென் ரெசாய் எச்சரித்துள்ளார்.
மேலும், ஈரானிய மக்கள் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு போர்க்களத்திலும், ஹோர்முஸ் நீரிணையிலும் ஒரு உத்திசார் தோல்வியையும், வாஷிங்டனில் ஒரு அரசியல் தோல்வியையும் பரிசாக அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.