மெட்டா ரூங்ராட் 
சினிமா

எம்.ஜி.ஆர் உடன் நடித்த தாய்லாந்து நடிகை மரணம்

’பச்சைக்கிளி முத்துச்சரம்...’ பாடலில் எம்.ஜி.ஆர் உடன் நடனமாடிய தாய்லாந்து நடிகை மெட்டா ரூங்ராட், தமது 83 வயதில் உயிரிழந்தார்

Manigandan Raja

எம்.ஜி.ஆர் உடன் இணைந்து நடித்த தாய்லாந்து நடிகை பழம்பெரும் நடிகை மெட்டா ரூங்ராட் 83 வயதில் உயிரிழந்தார்
பச்சைக்கிளி முத்துச்சரம் பாடலில் எம்.ஜி.ஆருடன் நடனமாடியவர்

மெட்டா ரூங்ராட்டின் மறைவு

மெட்டா ரூங்ராட் மற்றும் MGR

எம்.ஜி.ஆர் உடன் இணைந்து நடித்த தாய்லாந்து நாட்டை சேர்ந்த பழம்பெரும் நடிகை மெட்டா ரூங்ராட் உடல் நலக்குறைவால் 83 ஆவது வயதில் காலமானார்.

உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தின் பச்சைக்கிளி முத்துச்சரம் பாடலில் எம்.ஜி.ஆருடன் நடனமாடி புகழ்பெற்ற மெட்டா ரூங்ராட்டின் மறைவுவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

40 ஆண்டுகள் கலைப்பயணம்

40 ஆண்டுகளுக்கும் மேலான தனது கலைப்பயணத்தில் 180-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் மெட்டா ரூங்ராட் நடித்துள்ளார்.