தாய் ஸ்ரீதேவி குறித்து நினைவுகூர்ந்த நடிகை ஜான்வி கபூர் "மூக்கு அறுவை சிகிச்சை செய்த பிறகே என் மீது நம்பிக்கை வந்தது"
மறைந்த நடிகை ஸ்ரீதேவி குறித்து அவரது மகளும், பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூர் மனம் திறந்துள்ளார்.
தாயார் ஸ்ரீதேவியின் நினைவுகள் மற்றும் தனது திரையுலக பயணம் குறித்து பேசிய அவர், தாம் சினிமா துறையில் நுழைவது குறித்து தனது தாய் ஸ்ரீதேவி ஆரம்பத்தில் தயக்கம் காட்டியதாகவும், ஆனால் தாம் மூக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்ட பிறகுதான் தனது திறமை மீது அவருக்கு நம்பிக்கை வந்ததாகவும் ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார்.