இணையத்தில் வைரலாகி வரும் நடிகை த்ரிஷாவின் பதிவு தீபாவளிக்கு சிறப்பான விஷயத்தை செய்யப் போகிறேன் ஆதரவற்ற நாயின் உணவுக்கு ஸ்பான்சர் செய்வதாக தகவல்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, த்ரிஷா வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
இந்த தீபாவளிக்கு தாம் ஒரு சிறப்பான விஷயத்தை செய்யப் போவதாகவும், மீட்கப்பட்ட ஆதரவற்ற நாய் ஒன்றின் உணவுக்கு ஸ்பான்சர் செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், வெறும் ஆயிரம் ரூபாய் இருந்தால், மீட்கப்பட்ட ஒரு நாய்க்கு ஒரு மாதம் முழுமைக்கும் உணவளிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.