Ravadi 
சினிமா

அக்சய் குமார் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியீடு

புதிய படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்கை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார்.

Manigandan Raja

‘சிறை’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த அக்சய் குமார் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்கை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார்.

‘ராவடி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்குகிறார். இப்படத்தில் ஜாபர் சாதிக், நோபல் கே.ஜேம்ஸ், அருணாச்சலேஸ்வரன் , ஷாரீக் ஹாஸன் மற்றும் 'டியூட்' படத்தில் நடித்த ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.