Sai pallavi 
சினிமா

பாலிவுட்டில் சாய் பல்லவியின் "ஏக் தின்" திரைப்படம்

இந்த திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Manigandan Raja

"ஏக் தின்" திரைப்படம் :

சாய் பல்லவியின் "ஏக் தின்" திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் அமீர்கான் தயாரிப்பில் உருவாகும் "ஏக் தின்" திரைப்படத்தின் மூலம் சாய் பல்லவி பாலிவுட்டில் அறிமுகமாகிறார்.

இயக்குநர் சுனில் பாண்டே இயக்கத்தில் உருவாகும், இந்த திரைப்படத்தில் நடிகர் ஜுனைத் கான் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.