Prabhu deva 
சினிமா

பிரபுதேவா வெளியிட்ட ஜாலி வீடியோ

இந்த காமெடி கெமிஸ்ட்ரி கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Elizebath Elizebath

ஜாலி வீடியோ : 

நடிகரும் நடன இயக்குநருமான பிரபுதேவா ஜாலியாக நடனடமாடி வீடியோ வெளியிட்டுள்ளார். நடிகர்கள் பிரபுதேவா, வடிவேலு கூட்டணியில்`BANG BANG' என்ற படம் தற்போது தயாராகி வருகிறது.

இந்த படத்தை சாம் ரோட்ரிகஸ் இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். காதலன், மனதை திருடிவிட்டாய், ராசைய்யா, மிஸ்டர் ரோமியோ, லவ் பேர்ட்ஸ் மற்றும் எங்கள் அண்ணா போன்ற படங்களின் மூலம் 90ஸ்களில் ரசிகர்களை மகிழ்வித்த இந்த காமெடி கெமிஸ்ட்ரி கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.