"ஜான் டோ" திரைப்படம் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி வரவேற்பு "நான் போதுமா.." எனத் தொடங்கும் பாடல் வெளியீடு
அர்ஜுன் தாஸ் நடிக்கும் "ஜான் டோ" திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
முஜீப்மஜீத் இசையில் ‘நான் போதுமா’ என தொடங்கும் பாடலை மாளவிகா பாடியுள்ள நிலையில், நடிகர் அர்ஜுன் தாஸ் ராப் வரிகளை பாடியுள்ளார்.
இயக்குநர் மதுமிதா எழுத்து - இயக்கத்தில் க்ரைம் த்ரில்லராக உருவாகும் இந்த படத்தில், சஞ்சனா நடராஜன், ஸ்ருஷ்டி டாங்கே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படம் நவம்பர் 13-ம் தேதி வெளியாக உள்ளது.