Kerala actor death 
சினிமா

பழம்பெரும் நடிகர் புன்னப்ரா அப்பச்சன் காலமானார்

மலையாள திரையுலகில் அறிமுகமாகி, தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 1,000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர்

Web Team

கேரளாவை சேர்ந்த பழம்பெரும் நடிகர் புன்னப்ரா அப்பச்சன் வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக ஆலப்புழையில் காலமானார். 1970களில் 'ஒத்தனிண்டே மகன்' என்ற படம் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமாகி, தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 1,000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் அப்பச்சன். வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த இவர், உடல்நல குறைவால் காலமானார். அவரது மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.