Jai 
சினிமா

நடிகர் ஜெய் நடிக்கும் "சட்டென்று மாறுது வானிலை" திரைப்படம்

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த பாபு விஜய், இந்த திரைப்படத்தை இயக்க, நாயகியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்.

Manigandan Raja

"சட்டென்று மாறுது வானிலை"  :

நடிகர் ஜெய்யின் "சட்டென்று மாறுது வானிலை" திரைப்படத்தின் "அக்கடி கொழுத்து பக்கடி" என்கிற புதிய பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. "சர்கார்" மற்றும் "தர்பார்" திரைப்படங்களில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த பாபு விஜய், இந்த திரைப்படத்தை இயக்க, நாயகியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்.

மேலும், யோகிபாபு, கேஜிஎஃப் புகழ் கருடா ராம், ஸ்ரீமன், ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் தேவா பாடியுள்ள இந்த பாடல், இணையத்தில் வைரலாகி வருகிறது.