Dhaunsh 
சினிமா

"தனுஷ் 55" திரைப்படம் குறித்து சாய் அபியங்கர் சுவாரசிய தகவல்

"கர" திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ், விரைவில் தனது 55ஆவது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

Manigandan Raja

சாய் அபியங்கர் சுவாரசிய தகவல் :

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷின் 55ஆவது திரைப்படத்தில் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ள இளம் இசையமைப்பாளர் சாய் அபியங்கர், திரைப்படம் குறித்த சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார்.

திரைப்படத்தில் அழகான காதல் பாடல்கள் மற்றும் அதிக நடன காட்சிகள் இடம் பெறும் என்று அவர் நிகழ்ச்சி ஒன்றில் கூறினார். தனுஷ் ரசிகர்களுக்கு இது புதிய விருந்தாக இருக்கும் என்றார். "கர" திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ், விரைவில் தனது 55ஆவது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.