CIBI Sathyaraj 
சினிமா

விஜய் குறித்த தனது தங்கையின் கேள்விக்கு சிபிராஜ் பதிலடி

"மணியா வரலாறை தெரிஞ்சுக்க" என்கிற வசனத்தை வைத்து விட்டு, விஜய் இதுவரை செய்த உதவிகள் தொடர்பான வீடியோவை பகிர்ந்துள்ளார்.

Manigandan Raja

சிபிராஜ் பதிலடி :

தவெக தலைவர் விஜய் குறித்த தனது தங்கை திவ்யாவின் கேள்விக்கு, சிபிராஜ் பதிலடி கொடுத்துள்ளார். திமுகவில் இணைந்துள்ள திவ்யா, அரசியலுக்கு வருவதற்கு முன்பு நீங்கள் மக்களுக்கு என்ன செய்திருக்கிறீர்கள்? என விஜய்க்கு கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்த சூழலில், விஜயின் தீவிர ரசிகரான சிபிராஜ், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், அமைதிப்படை படத்தில் மணிவண்ணனிடம் பேசும் சத்யராஜ், "மணியா வரலாறை தெரிஞ்சுக்க" என்கிற வசனத்தை வைத்து விட்டு, விஜய் இதுவரை செய்த உதவிகள் தொடர்பான வீடியோவை பகிர்ந்துள்ளார்.