news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமண வரவேற்பு
tv

Also Watch

tv

Read this

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமண வரவேற்பு

ஐதராபாத்தில் கோலாகலம்

55

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

நடிகர் விஜய் தேவரகொண்டா - நடிகை ராஷ்மிகா திருமண வரவேற்பு நிகழ்ச்சி, ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது. விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகாவின் திருமண வரவேற்பு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

மலர்ந்த காதல்
தெலுங்கில் வெளியான ‘கீதா கோவிந்தம்’ திரைப்படம் மூலம் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா ஜோடி, ஒருவரையொருவர் காதலித்து வருவதாக கூறப்பட்டது. நீண்ட நாள் காதலர்களாக இருந்த இருவரும், டேட்டிங்கில் இருந்ததாகவும் கூறப்பட்டது. இதுதொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலானது. அப்போது, இருவரும் தாங்கள் காதலித்து வருவது குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.


பிரம்மாண்டமான திருமணம்

இந்த நிலையில், விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா ஜோடியின் திருமணம் ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் நண்பர்கள், குடும்பத்தினர், உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த திருமணத்தை தொடர்ந்து, தெலங்கானா மாநிலம் தும்பன்பேட் என்ற தனது பூர்வீக கிராமத்துக்கு ராஷ்மிகாவை அழைத்துச் சென்றார் விஜய் தேவரகொண்டா. அந்த கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் 44 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதாக விஜய் தேவரகொண்டா அறிவித்தார்.

கோலாகலமான வரவேற்பு நிகழ்ச்சி
இதை தொடர்ந்து, விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா ஜோடியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மார்ச்-4 ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்றது. பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திரையுலகை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். கோலிவுட்டிலிருந்து, நடிகர் கார்த்தி சென்று மணமக்களை வாழ்த்தினார். தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் திருமண வரவேற்பில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். கர்நாடக துணை முதல்வர் சிவராஜ்குமார் திருமண வரவேற்பில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

குவிந்த வி.ஐ.பி.க்கள்
சிரஞ்சீவியின் மகனும், நடிகருமான ராம் சரண் திருமண வரவேற்பில் கலந்துகொண்டார். நடிகர் நானி, ஏ.வெங்கடேஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா, அவரது மகன் நாக சைதன்யா உள்ளிட்டோரும் திருமண வரவேற்பில் கலந்து கொண்டனர். நடிகர் சரத்குமார், ராதிகா இருவரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

வைரலாகும் புகைப்படங்கள்
இந்த நிலையில், விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமண வரவேற்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.


Related Link
“கண்ணீர் வரும் வரை...”

“கண்ணீர் வரும் வரை...”


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சாகசத்தில் ஈடுபட்டபோது ஏமன் நாட்டின் ஸ்பைடர்மேன் பலி

3
9 hrs 23 mins agoshare
ஏமன்  ஸ்பைடர்மேன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved