news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews முழுவீச்சில் தயாராகி வரும் ஜாம்பவான் ரொனால்டோ
tv

Also Watch

tv

Read this

முழுவீச்சில் தயாராகி வரும் ஜாம்பவான் ரொனால்டோ

ஃபிஃபா

9

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ரொனால்டோ

ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பு :

ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்தாண்டின் தனது முதல் ஆட்டத்திற்காக ஜாம்பவான் ரொனால்டோ தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

வரும் 17-ஆம் தேதி நடைபெறும் போட்டியில் காங்கோ அணியை எதிர்த்து போர்ச்சுகல் அணிக்காக அவர் விளையாடுகிறார். இதுவே அவரின் கடைசி உலகக் கோப்பை என நம்பப்படுவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

உலகக் கோப்பை கால்பந்து தொடர்: ஜெர்மனி வெற்றி :

உலகக் கோப்பை கால்பந்து தொடரில், 4 முறை உலக சாம்பியனான ஜெர்மனி அணி, 7-க்கு 1 என்கிற கோல் கணக்கில், அறிமுக அணியான குராசாவ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், பெலிக்ஸ் நமேச்சா, நிக்கோ ஸ்க்லோட்டர்பெக், கை ஹாவர்ட்ஸ், ஜமால் முசியாலா, நதானியேல் பிரவுன், டெனிஸ் உண்டா ஆகியோர் கோல் அடித்தனர்.

பாகிஸ்தான் கேப்டனுடன் கை குலுக்காத இந்திய கேப்டன் :

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்றைய போட்டியின் போது பாகிஸ்தான் கேப்டனுடன் கைகுலுக்க இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் மறுத்து விட்டார்.

கடந்தாண்டு பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் வீரர்களுடன் பரஸ்பர கை குலுக்குவது, போட்டிக்கு பின் இரு அணிகளும் வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வதை இந்திய அணி தவிர்த்து வருகிறது.

உலக சாதனை படைத்த இந்திய வீராங்கனை தீப்தி சர்மா :

சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்த வீராங்கனை என்ற உலக சாதனையை இந்தியாவின் தீப்தி சர்மா படைத்துள்ளார். மகளிர் டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் ஒட்டு மொத்தமாக 166 விக்கெட்டுகளை எடுத்து பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறினார்.

நெதர்லாந்தை வீழ்த்தி வங்கதேச அணி வெற்றி :

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசம் 19.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Related Link
மகளிர் டி20 கிரிக்கெட்- பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி

மகளிர் டி20 கிரிக்கெட்- பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜனநாயகன் ரிலீஸ்காக மாஸ் பிளான்

2
8 hrs 57 mins agoshare
ஜனநாயகன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau