news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews அரசு கட்டணத்தை விட பத்து மடங்கு கூடுதலாக வசூல்
tv

Also Watch

tv

Read this

அரசு கட்டணத்தை விட பத்து மடங்கு கூடுதலாக வசூல்

அரூர், தருமபுரி

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
வாகன கட்டணக் கொள்ளை

தருமபுரி  மாவட்டம் அரூர் வட்டம் தீர்தமலை அருள்மிகு தீர்தகிரீஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் வாகன கட்டணம் என்ற பெயரில் ஒப்பந்ததாரர் அடாவடி வசூலில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது.

புகாரின் பேரில் விசாரணைக்கு வந்த அரூர் வட்டார வளர்சி அலுவலர்கள் அதிக கட்டணம் வசூலித்த போலி ரசீதுகளை பறிமுதல் செய்தனர். இதை செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை ஒப்பந்ததாரர் கொலை மிரட்டல் விடுத்து தடுத்த சம்பவமும் அரங்கேறியுள்ளது.

அரூரில் இருந்து 16 கி.மீ., தருமபுரியில் இருந்து 60 கி.மீ தொலைவில் அமைந்துள்ள தீர்தமலையில் இறைவன் "தீர்தகிரீஸ்வரர்" சுயம்பு மூர்தியாக அருள்பாலிக்கிறார். மலையே லிங்க வடிவில் காட்சியளிப்பது தனிச்சிறப்பு.

ராவணனை வதம் செய்த பின் ராமபிரான் இங்கு சிவபூஜை செய்ததாகவும், பாணம் எய்து "ராமர் தீர்தம்" உருவாக்கியதாகவும் தல புராணம் கூறுகிறது. இம்மலையில் ராமர் தீர்தம், அனுமந்த தீர்தம், அகத்திய தீர்தம், அக்னி தீர்தம், குமார தீர்தம், கௌரி தீர்தம், வாயு தீர்தம், வருண தீர்தம், இந்திர தீர்தம், எம தீர்தம் என 10-க்கும் மேற்பட்ட தீர்தங்கள் உள்ளன. ராமர் தீர்தத்தில் நீராடினால் பிரம்மஹத்தி தோஷம் உள்ளிட்ட பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். மூலிகை சத்து கலந்த தீர்தங்களால் உடல், மன நோய்கள் தீரும் என பக்தர்கள் நம்புகின்றனர்.

அமாவாசை கூட்டத்தை சாதகமாக்கும் ஒப்பந்ததாரர் : 

உலகப் புகழ்பெற்ற இத்தலத்திற்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்தும் அமாவாசை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள், பேருந்துகளில் பக்தர்கள் குவிகின்றனர்.

இதை சாதகமாக பயன்படுத்தும் வாகன நிறுத்த ஒப்பந்ததாரர், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட 10 மடங்கு கூடுதலாக வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அடியாட்களை வைத்துக்கொண்டு பக்தர்களை மிரட்டி வசூல் செய்வதாகவும், கேள்வி கேட்போரை தாக்க முயல்வதாகவும் பக்தர்கள் புகார் அளித்தனர்.


அதிகாரிகள் சோதனை - ரசீது பறிமுதல் : 
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரூர் வட்டார வளர்சி அலுவலர்கள் மார்கரெட் மேரி செல்வம் தலைமையிலான குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். ஒப்பந்ததாரரிடம் இருந்து அரசு நிர்ணய கட்டணத்தை விட அதிக தொகை வசூலித்த போலியான கட்டண ரசீதுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து சென்றனர். இதனால் ஒப்பந்ததாரரின் முறைகேடு அம்பலமானது.

தீர்தகிரீஸ்வரர் சுற்றுலா தலத்தை மேம்படுத்தும் நோக்கில் பக்தர்கள் கோரிக்கையை முன்வைத்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் குழுவை ஒப்பந்ததாரர் வழிமறித்துள்ளார். "எதற்காக செய்தி எடுக்கிறீர்கள்? ஏன் எடுக்கிறீர்கள்?" என கேள்வி எழுப்பி, இளம் வயது சிறுவனை வைத்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்து செய்தி எடுக்க விடாமல் தடுத்துள்ளார். இச்சம்பவம் பத்திரிகை சுதந்திரத்திற்கு விடப்பட்ட சவாலாக பார்கப்படுகிறது.

இதனால் பக்தர்களின் வருகை குறைவதுடன், சுற்றுலா பயணிகளும் தீர்தமலை வர அஞ்சுகின்றனர். "பாவம் போக வந்த இடத்தில் மிரட்டலும், கொள்ளையும்" என பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். வாகன நிறுத்த இடத்தில் போதிய கண்காணிப்பு, பாதுகாப்பு இல்லாததால் பெண்கள், முதியவர்கள் அச்சத்துடன் வருகின்றனர்.

எனவே இந்து சமய அறநிலையத்துறை, மாவட்ட நிர்வாகம், காவல்துறை தலையிட்டு வாகன நிறுத்த கட்டணத்தை அரசு விதிப்படி நிர்ணயம் செய்ய வேண்டும். ஒப்பந்ததாரரின் அடாவடி, செய்தியாளர்களை மிரட்டிய செயல் குறித்து வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூடுதல் போலீஸ் பாதுகாப்பு, சிசிடிவி கண்காணிப்பு ஏற்படுத்தி பக்தர்கள் மற்றும் செய்தியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Link
சிங்கப்பெண் படை போலீசாரிடம் சீறிய சிறுவன்

சிங்கப்பெண் படை போலீசாரிடம் சீறிய சிறுவன்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பொதுவழி பாதையை தனி நபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக புகார்

0
23 mins agoshare
விவசாயிகள் மறியல்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved