news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news சோலார் இருக்கு, கரண்ட் எதுக்கு? முதல்வரை கேட்டால் மின்சாரம் வந்திடுமா?
tv

Also Watch

tv

Read this

சோலார் இருக்கு, கரண்ட் எதுக்கு? முதல்வரை கேட்டால் மின்சாரம் வந்திடுமா?

முட்டுக் கொடுத்து சிக்கிய மகேந்திரன்

16

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கோலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தத்தி தவழ்ந்து தமிழ்த் திரையுலகில் தலைகாட்டி வரும் மாஸ்டர் மகேந்திரன், லைம் லைட்டில் வருவதற்காக மின்வெட்டு பிரச்னை குறித்து பேசி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

இப்போதும் மாறாமல் அப்படியே...
குழந்தைல பார்த்தது, இன்னும் அப்படியே இருக்கியேப்பா... என ஒரு சிலர் சொல்வதைப் போல, குழந்தையாய் நாட்டாமை படத்தில் சாட்சி சொன்ன மகேந்திரனுக்கு, மன்னிக்கவும் மாஸ்டர் மகேந்திரனுக்கு அப்போது இருந்த அதே ஞானம் தான் இப்போதும் மாறாமல் அப்படியே இருப்பதாக கூறி நெட்டிசன்கள் வியந்து வருகின்றனர்.

அடிக்கடி மின்வெட்டு
தமிழ்நாட்டில் முன் எப்போதும் இல்லாத வகையில், நடப்பு ஆண்டின் கோடை காலத்தில் அடிக்கடி மின் வெட்டு ஏற்பட்டு மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். அதுவும் ஆட்சி மாற்றத்திற்கு பின் புதிய அரசுக்கு பெரும் நெருக்கடியாக இந்த விவகாரம் உருவெடுத்துள்ளது. இரவில் நிம்மதியான உறக்கம் இல்லை என, மக்கள் வீதிக்கு வராத நாட்களே இல்லை என்ற அளவுக்கு மின்வெட்டு பிரச்னை பூதாகரமாகி உள்ளது. இப்போது ஓரளவுக்கு நிலைமை சரி செய்யப்பட்டு விட்டாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் மின்வெட்டு பிரச்னை நீடிக்கத் தான் செய்கின்றன.

என் வீட்டில் இருந்து...
மக்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள மின்வெட்டு விவகாரத்தை நக்கலடித்து பேசி வாண்ட்டடாக வண்டியில் ஏறியிருக்கிறார் மாஸ்டர் மகேந்திரன். யூட்யூப் சேனல் ஒன்றிற்கு நேர்காணலளித்த மகேந்திரனிடம், மின் வெட்டு பிரச்னை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு என் வீட்டுலயும் தான் கரண்ட் கட் ஆகுது. அதுக்காக நம்ம முதலமைச்சர கேள்வி கேட்டா கரண்ட் வந்துருமா? என கேட்டதோடு, சோலார் சிஸ்டம் எதுக்கு இருக்கு? எனக்கு அதிலிருந்து கரண்ட் எடுக்க தெரியும் அதனால என்வீட்ல இருந்து கரண்ட் எடுத்துக்கோங்க என சகிக்க முடியாத உடல் மொழியுடன் பேசியிருக்கிறார்.

பறி போன படவாய்ப்பு
இந்த உடல்மொழியாலும், அதிகபிரசங்கித் தனத்தாலும் தான் சூர்ய வம்சம் படத்தில் அவருக்கு வந்த வாய்ப்பு பறிபோனதாக சக நடிகர்களே பொருமித் தள்ளியிருந்ததை நேரம் பார்த்து வீதிக்கு கொண்டு வந்துள்ளனர் நெட்டிசன்கள்.

இதே மகேந்திரன் தான் சில வருடங்களுக்கு முன்பு ஜல்லிக்கட்டு பிரச்னையின் போது, நாம் இறங்கி கேள்வி கேட்க வேண்டும் என வீடியோ வெளியிட்டு கொந்தளித்திருந்தார். அதே மகேந்திரன் இப்போது, கேள்வி கேட்டால் கரண்ட் வந்துவிடுமா? என எலைட் புத்தியில் நக்கலடிக்கிறார்.

வாய்ப்பே இல்லை
இவருடைய இந்த Attitudeக்கு தான் ஒரு முறை சிவகார்த்திகேயனும் நிகழ்ச்சி ஒன்றில் கலாய்த்திருப்பார் அந்த வீடியோவும் இப்போது சுத்தலில் விடப்பட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதலமைச்சரை நோக்கி மக்கள் கேள்வி எழுப்புவது தான் ஜனநாயகம் என்பதை கூட புரிந்து கொள்ள முடியாத குழந்தையாக இருக்கும் மகேந்திரன், வீக்கெண்ட் அதுவுமாக இணைய வாசிகளின் கையில் சிக்கிக் கொண்டிருப்பது பரிதாபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அடுத்த கண்டண்ட் சிக்கும் வரை, மகேந்திரனை இப்போதைக்கு டிஸ்சார்ஜ் செய்வதற்கான வாய்ப்பே இல்லை என்கின்றனர் நெட்டிசன்கள்...


Related Link
மக்களை தெருநாயுடன் ஒப்பிட்டு நடிகர் ராகவா லாரன்ஸ் பேச்சு?

மக்களை தெருநாயுடன் ஒப்பிட்டு நடிகர் ராகவா லாரன்ஸ் பேச்சு?

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜனநாயகன் ரிலீஸ்காக மாஸ் பிளான்

2
9 hrs 30 mins agoshare
ஜனநாயகன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau