news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news மக்களை தெருநாயுடன் ஒப்பிட்டு நடிகர் ராகவா லாரன்ஸ் பேச்சு?
tv

Also Watch

tv

Read this

மக்களை தெருநாயுடன் ஒப்பிட்டு நடிகர் ராகவா லாரன்ஸ் பேச்சு?

சமூக வலை தளத்தில் சர்ச்சை

34

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மக்களுக்கு அரசு செய்ய வேண்டிய பணிகளை பற்றி பேசிய போது, தெருநாய்களுடன் ஒப்பிட்டு நடிகர் ராகவா லாரன்ஸ் பேசியதாக, சர்ச்சை எழுந்துள்ளது.

தவெக ஆட்சி சிறப்பாக உள்ளது
இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ராகவா லாரன்ஸ் பேசியதாவது;
கடந்த ஒரு மாத காலத்தில் தவெக ஆட்சி சிறப்பாக உள்ளது. கோவில்களுக்கு அருகில் இருந்த டாஸ்மாக் கடைகளை அகற்றியதை வரவேற்கிறேன். பொறாமை காரணமாக தமிழக வெற்றிக் கழக ஆட்சியை விமர்சிக்கின்றனர்.



நல்ல முடிவை எடுத்துள்ளேன்

அரசியலுக்கு வருவது தொடர்பாக நல்ல முடிவை எடுத்துள்ளேன்; விரைவில் ரசிகர்களை கூட்டி மேடையில் எனது தாய் முன்னால், நல்ல முடிவை அறிவிக்க இருக்கிறேன்.

ரசிகர்களுக்கு நன்றி
வீடு தேடி வந்து அரசியலுக்கு வருமாறு அழைத்த ரசிகர்கள் அன்புக்கு நன்றிகள்; நீங்கள் நினைப்பது விரைவில் நடக்கும். நான் அரசியலுக்கு வரலாமா, வேண்டாமா என நினைத்தேன். நீங்கள் வாருங்கள் என அழைத்தது சந்தோஷம்; ஒரு நல்ல முடிவை எடுத்துள்ளேன்.

மக்களை தெருநாயுடன் ஒப்பிட்டு பேச்சு?
தெருநாய்களுக்கு கூட அவற்றிற்கு பிடித்த உணவை கொடுக்க வேண்டும். அதே போன்று மக்களுக்கு தேவையானதை அறிந்து செய்ய கால அவகாசம் தேவை.
இவ்வாறு ராகவா லாரன்ஸ் பேசி உள்ளார்.

இந்நிலையில், தமிழ்நாட்டு மக்களை தெருநாய்களுடன் லாரன்ஸ் ஒப்பிட்டு பேசியதால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

Related Link
அரசியலுக்கு வருவதா? வேண்டாமா? ரசிகர்களிடம் அனுமதி கேட்கும் லாரன்ஸ்

அரசியலுக்கு வருவதா? வேண்டாமா? ரசிகர்களிடம் அனுமதி கேட்கும் லாரன்ஸ்

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக - அதிமுக கூட்டணி கட்டுக்கதை, இபிஎஸ் முதல்முறை விளக்கம்

2
26 mins agoshare
தவெக மீது பாய்ச்சல்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau